sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

திறப்பு விழா காணாமல் கைவிடப்பட்ட பூங்கா

/

திறப்பு விழா காணாமல் கைவிடப்பட்ட பூங்கா

திறப்பு விழா காணாமல் கைவிடப்பட்ட பூங்கா

திறப்பு விழா காணாமல் கைவிடப்பட்ட பூங்கா


ADDED : பிப் 08, 2026 05:57 AM

Google News

ADDED : பிப் 08, 2026 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, பள்ளப்பட்டி நகராட்சியில், 17-வது கிராஸ், ஷா நகரில் ஓராண்டுக்கு முன்பு, சக்தி பூங்கா கட்டி முடிக்கப்பட்டு தற்போது வரை திறப்பு விழா காணாத நிலையில் பராமரிப்பின்றி உள்ளது. அரசு நிதியுதவியுடன், பொதுமக்களின் ஓய்வு நேர பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட பூங்கா, தற்-போது பயன்பாடற்ற நிலையில் உள்ளது.

பூங்-காவில் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டிருந்த, விளையாட்டு உபகரணங்கள் ஒன்றன் பின் ஒன்-றாக திருடப்பட்டுள்ளதுடன், அங்கு கட்டப்பட்டி-ருந்த கழிவறையின் கதவுகள் உள்ளிட்ட பொருட்-களும் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளதாக இப்-பகுதி மக்கள் கூறுகின்றனர்.பூங்கா முழுவதும் புதர்கள் அடர்ந்து, விஷ ஜந்-துக்கள் தங்கும் இடமாக மாறியுள்ளது. ஓராண்-டுக்கும் மேலாக மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. எனவே, பள்ளப்பட்டி நகராட்சி நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுத்து, பூங்காவை சீர-மைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்-றனர்.






      Dinamalar
      Follow us