/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே கூடுதல் மின் விளக்கு அமைக்க வேண்டும்

ADDED : நவ 01, 2024 01:28 AM
மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே
கூடுதல் மின் விளக்கு அமைக்க வேண்டும்
கரூர், நவ. 1-
மாவட்ட விளையாட்டு மைதானம் செல்லும் சாலையில், கூடுதலாக மின் விளக்கு வசதி அமைத்து தர வேண்டும்.
கரூர், திண்டுக்கல் சாலையில், கலெக்டர் அலுவலகம் முன்னதாக மாவட்ட விளையாட்டு மைதானத்துக்கு செல்லும் சாலை பிரிகிறது. இந்த சாலையோரம், தற்போது புதுப்புது குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. ஆனால், சாலையில் குடியிருப்புகளுக்கு ஏற்ப மின்
விளக்கு வசதி குறைவாக உள்ளது. மாலை நேரங்களில் ஏராளமான வீரர்கள், மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு விட்டு, பல்வேறு பகுதிகளுக்கு இச்சாலை வழியாக செல்கின்றனர்.
அனைவரின் நலன் கருதி, விளையாட்டு மைதானத்துக்கு செல்லும் சாலையோரம், கூடுதலாக மின் விளக்கு வசதி அமைத்து தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.