/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையில் கிடக்கும் மின்சார டிரான்ஸ்பார்மர்; கரூரில் வாகன ஓட்டிகள் அவதி
/
சாலையில் கிடக்கும் மின்சார டிரான்ஸ்பார்மர்; கரூரில் வாகன ஓட்டிகள் அவதி
சாலையில் கிடக்கும் மின்சார டிரான்ஸ்பார்மர்; கரூரில் வாகன ஓட்டிகள் அவதி
சாலையில் கிடக்கும் மின்சார டிரான்ஸ்பார்மர்; கரூரில் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : செப் 25, 2024 06:53 AM
கரூர்: கரூரில் சாய்ந்த மின்சார டிரான்ஸ்பார்மரை அகற்றாமல் சாலையில் போட்டுள்ளனர். இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.
கரூர் ரத்தினம் சாலையில், இரட்டை வாய்க்கால் சீரமைப்பு பணி கடந்த, 20 இரவு நடந்தது. அப்போது, வாய்க்கால் ஓரத்தில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் சாய தொடங்கியது. இதனால், பொக்லைன் இயந்திரம் மூலம், மின்சார டிரான்ஸ்பார்மர், வாய்க் காலில் சாயாமல் இருக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.
பிறகு, அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மின்சார டிரான்ஸ்பார்மர் மூலம் செயல்பட்ட, மின் இணைப்பு கள் மாற்றி அமைக்கப்பட்டு, அரைமணி நேரத்துக்கு பிறகு, மீண்டும் மின் சப்ளை வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து, வாய்க்கால் ஓரத்தில் இருந்து அகற்றப்பட்ட, மின்சார டிரான்ஸ்பார்மரை, சாலையில் போட்டுள்ளனர். கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, பஸ்கள் ரயில்வே ஸ்டேஷனுக்கு, ரத்தினம் சாலை வழியாக செல்கிறது. இந்நிலையில், சாலையின் மின்சாரடிரான்ஸ் பார்மர் போடப்பட்டுள்ளதால், கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும் பெரும் அவதிப்படுகின் றனர். எனவே, கரூர் ரத்தினம் சாலையில் போடப்பட்டுள்ள, மின்சார டிரான்ஸ்பார்மரை அகற்ற, மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.