/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தீ விபத்தில் தனியார் பஸ் பாடி நிறுவன ஊழியர் படுகாயம்
/
தீ விபத்தில் தனியார் பஸ் பாடி நிறுவன ஊழியர் படுகாயம்
தீ விபத்தில் தனியார் பஸ் பாடி நிறுவன ஊழியர் படுகாயம்
தீ விபத்தில் தனியார் பஸ் பாடி நிறுவன ஊழியர் படுகாயம்
ADDED : அக் 05, 2024 01:06 AM
தீ விபத்தில் தனியார் பஸ் பாடி
நிறுவன ஊழியர் படுகாயம்
கரூர், அக். 5-
கரூர் அருகே, தனியார் பஸ் பாடி கட்டும் நிறுவனத்தில், தீ விபத்தில் சிக்கிய ஊழியர் படுகாயம் அடைந்தார்.
தான்தோன்றிமலை விக்னேஷ்வரா நகரை சேர்ந்த, ராமச்சந்திரன் என்பவரது மகன் விஜய், 29; கரூர் அருகே வேப்பம்பாளையத்தில் உள்ள, தனியார் பஸ் பாடி கட்டும் நிறுவனத்தில், வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 2ல் விஜய் புதிய பஸ்சுக்கு, வெல்டிங் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பஸ்சின் டீசல் டேங்கர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், விஜய்க்கு முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது. இதனால், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், விஜய் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.