ADDED : ஜூலை 17, 2025 01:38 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் கிராமத்தில், அங்காளம்மன், காமாட்சி அம்மன், பட்டகுலக்காரன், பெரியசாமி, மாயவர், மதுரைவீரன் அடங்கி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை, திம்மாச்சிபுரம் காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தக்குடம், பால் குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். அதை தொடர்ந்து, கணபதி ஹோமம், யாகசாலை பிரவேசம், யாக வேள்வி, பூர்ணாஹூதி பூஜை, உபசார பூஜை, தீபாராதனை நடந்தது.
நேற்று காலை, 6:30 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை செய்யப்பட்டது. பின், காலை, 9:45 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
கோவில் பரிவார சுவாமி கள் மற்றும் கோவில் கருவறையில் உள்ள சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு, பூஜை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் வயலுார், லாலாப்பேட்டை, வேலாயுதம்பாளையம் மற்றும் மலேசியா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.