ADDED : ஆக 28, 2026 06:56 AM

கரூர்:கரூர்
மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட
கட்டளையில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில், 19க்கும்
மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். கடந்த, 10 ஆண்டுகளுக்கு
முன் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், சுவர்
அரிப்பு, விரிசல் ஏற்பட்டுள்ளது.
பள்ளிக் கட்டடத்தின்
மேற்கூரையின் உள்பகுதி சேதமடைந்து அவ்வப்போது சிமென்ட் காரைகள்
பெயர்ந்து விழுகின்றன. சத்துமாவு மூடைகள், பாத்திரங்களை
நெருக்கடியான இடத்தில் புழங்குவதால் குழந்தைகள் அமர்ந்து கல்வி பயில
வாய்ப்பில்லாத சூழல் உள்ளது. கழிப்பறை, குடிநீர் ஆகிய அடிப்படை
வசதிகள் குறைவால் பெரும்பாலான பிள்ளைகள் அங்கன்வாடிக்கு வருவதை
தவிர்க்கின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கும்,
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பலமுறை மனு அளித்தும் எந்த
நடவடிக்கையும் இல்லை. இனியாவது, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
