/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அங்கன்வாடி மையத்தில் பிழைகளுடன் காய்கறி பெயர்கள் சமூக வலைதளங்களில் வைரல்
/
அங்கன்வாடி மையத்தில் பிழைகளுடன் காய்கறி பெயர்கள் சமூக வலைதளங்களில் வைரல்
அங்கன்வாடி மையத்தில் பிழைகளுடன் காய்கறி பெயர்கள் சமூக வலைதளங்களில் வைரல்
அங்கன்வாடி மையத்தில் பிழைகளுடன் காய்கறி பெயர்கள் சமூக வலைதளங்களில் வைரல்
ADDED : அக் 04, 2024 03:10 AM
குளித்தலை: குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் திறந்து வைத்த, அங்கன்வாடி மையத்தின் சுவற்றில் வரைந்த தேசியக்கொடி மற்றும் தேசிய தலைவர்கள், காய்கறிகள் பெயர்களில் பிழைகள் இருந்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இது, சமூக வலைதளங்களில் வைரலானது.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த வைகைநல்லுார் பஞ்., கீழக்குட்டப்பட்டியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 11.93 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை எம்.எல்.ஏ., மாணிக்கம், காந்தி ஜெயந்தி நாளன்று திறந்து வைத்தார். அங்கன்வாடி மைய கட்டடத்திற்குள், குழந்தைகள் கற்பதற்காக சுவற்றில் வரையப்பட்டிருந்த தேசியக்கொடி, தேசிய தலைவர்களின் படங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றின் கீழ் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களில் பிழைகள் இருந்ததால் கல்வியாளர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மழலை செல்வங்கள் கற்றுக் கொள்வதற்காக, வரையப்பட்ட படங்களில் இத்தனை பிழைகளா? என அனைவரும் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து, குளித்தலை வட்டார ஊட்டச்சத்து அலுவலர் வினோதினி கூறுகையில்,'' கீழ குட்டப்பட்டியில் கட்டப்பட்ட, புதிய அங்கன்வாடி மைய கட்டட சாவி திறப்பு விழா அன்று காலையில்தான், யூனியன் மூலம் எங்களுக்கு வழங்கப்பட்டது. கட்டடத்தில் மின் இணைப்பு, குடிநீர் வசதி, கழிவறை வசதி இல்லாதது தற்போது தெரிய வருகிறது. இதுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை,'' என்றார்.
குளித்தலை யூனியன் கமிஷனர் விஜயகுமார் கூறுகையில்,'' சுவற்றில் வரையப்பட்ட படங்களின் கீழ், காய்கறிகளின் பெயர்கள் பிழைகளுடன் எழுதப்பட்டுள்ளது தற்போதுதான் தெரிய வருகிறது. பிழைகள் சரி செய்யப்படும். மேலும், அங்கன்வாடி மையத்தில் அனைத்து வசதிகளும் சரி செய்து தரப்படும்,'' என்றார்.

