கரூரில் அங்கன்வாடி பணியாளர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்
கரூரில் அங்கன்வாடி பணியாளர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்
ADDED : பிப் 08, 2026 05:53 AM

அ நிறம் | அளவு
கரூர்; கரூர் அங்கன்வாடி பணியாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று, இரண்டா-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்-டனர்.
தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள், உதவி-யாளர்கள் சங்கம் சார்பில், பென்ஷன், 6,750 ரூபாய் வழங்க வேண்டும் எனபன உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழு-வதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரு-கின்றனர்.கரூர் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று இரண்டாவது நாளாக, மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் பத்மாதேவி தலைமையில், காத்திருப்பு போராட்டம் நடந்தது. அதில், மாவட்ட செயலாளர் சிங்கராயர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் பங்கேற்றனர்.
