/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 19, 2026 05:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூரில் அங்கன்வாடி பணியாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் சங்கம் சார்பில், பென்ஷன், 6,750 ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் பத்மாதேவி தலைமையில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் பங்கேற்றனர்.

