தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்


ADDED : பிப் 13, 2026 07:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 07:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.நேற்று நடந்த போராட்டத்துக்கு, மாவட்ட தலைவர் பத்மாதேவி தலைமை வகித்தார்.

குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம், 6,750 ரூபாய் வழங்க வேண்டும். அகவிலை படியுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் நிலையில், 16,500 ரூபாய், அலுவலக உதவியாளர் நிலையில், 15,700 ரூபாய் என்ற அடிப்படையில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு, பெண் சத்துணவு ஊழியர்களுக்கு, 12 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் உள்ள, 60 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி. 6ம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us