ADDED : நவ 15, 2026 06:55 AM

அ நிறம் | அளவு
கரூர்:தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, மாவட்ட அரசு விளையாட்டு மைதானத்தில் சைக்கிள் போட்டி நடந்தது.
அதில்,
13 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர், 15 மற்றும் 17 வயதுக்குட்பட்ட
மாணவர்கள் என, மூன்று பிரிவுகளில் சைக்கிள் போட்டி நடத்தப்பட்டது.
போட்டியில், 87 மாணவர், 48 மாணவியர் பங்கேற்றனர். போட்டிகளை,
கிருஷ்ணராயபுரம் த.வெ.க., -எம்.எல்.ஏ., சத்யா தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில்,
கரூர் ஆர்.டி.ஓ., கார்த்திகேயன், விளையாட்டு மேம்பாடு ஆணைய மண்டல
முதுநிலை மேலாளர் செந்தில், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல்,
தாசில்தார் பிரகாஷ் உள்பட, பலர் பங்கேற்றனர்.
