/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நல்லுாரில் அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்தநாள் கூட்டம்
/
நல்லுாரில் அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்தநாள் கூட்டம்
நல்லுாரில் அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்தநாள் கூட்டம்
நல்லுாரில் அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்தநாள் கூட்டம்
ADDED : செப் 23, 2024 04:40 AM
குளித்தலை: முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளையொட்டி, நேற்று முன்தினம், குளித்தலை சட்டசபை தொகுதி, அ.தி.மு.க., சார்பில், நல்லுார் மாரியம்மன் கோவில் முன், பொதுக்கூட்டம் நடந்தது. குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சிவ-பதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:
தமிழகத்தில் தற்போது கஞ்சா, மது, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. இதனை, தி.மு.க., அரசு தடுக்க தவறிவிட்டது. இதன் காரணமாக, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இந்நிலையில், கூட்டணி கட்சியான, வி.சி., சார்பில் நடக்கும் மதுவிலக்கு மாநாட்டில், எந்த தைரியத்துடன், தி.மு.க.,வினர் பங்கேற்க போகின்றனர். கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட, பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் என, பல்வேறு நலத்திட்டங்களை, தி.மு.க., அரசு மூடுவிழா நடத்திவிட்டது. கரூர் மாவட்டத்தில், 1,600 கோடி ரூபாய் மதிப்பில், நெரூர், மருதுார் பகுதிகளில், அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்ட கதவணை திட்-டத்தை, தி.மு.க., அரசு நிராகரித்துவிட்டது. அ.தி.மு.க., அரசு கொண்டுவர முயற்சித்ததை தான், தற்போதைய பொம்மை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.