ADDED : ஏப் 10, 2026 06:00 AM
கரூர் : கரூர் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். கரூர் மாவட்டத்தில் தே.ஜ. கூட்டணி சார்பில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், அனைவரும் தீவிர களப்பணியாற்ற வேண்டும்.
இன்று (10ம் தேதி) மாலை 5:00 முதல் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட க.பரமத்தி மற்றும் கரூர் ஆகிய தொகுதிகளில் பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொள்கிறார். இதில் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர்கள் சக்தி வேல் முருகன், ஆறுமுகம், மாவட்ட பொதுச் செயலர்கள் சாமிதுரை, செல்வராஜ், உமாதேவி, மாவட்ட பொருளாளர் இளங்கோவன் உட்பட பலர் பங்கேற்றனர்.
