/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சொந்த ஊரில் மாட்டு பொங்கல் கொண்டாடிய அண்ணாமலை
/
சொந்த ஊரில் மாட்டு பொங்கல் கொண்டாடிய அண்ணாமலை
ADDED : ஜன 16, 2025 07:10 AM
கரூர்: பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, அவரது சொந்த ஊரான தொட்டம்பட்டியில் மாட்டு பொங்கல் விழாவை கொண்டாடினார்.
தைப்பொங்கலுக்கு மறுநாளான நேற்று, மாட்டு பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. கால்நடைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, கிராமங்களில் நேற்று கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள் நடந்தன. பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, அவரது சொந்த ஊரான கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகில் தொட்டம்பட்டியில் உள்ள, தனது வீட்டில் மாட்டு பொங்கலை கொண்டாடினார். வீட்டிற்கு பொங்கல் வாழ்த்து தெரிவிக்க, பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் அனைவருக்கும், அண்ணாமலை பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
மாவட்ட தலைவர் செந்தில்நாதன், மாவட்ட பொதுச்செயலாளர் சக்திவேல் முருகன் உள்பட பலர் உடனிந்தனர். பின் அவருடைய வீட்டில் உள்ள, 10க்கும் மேற்பட்ட பசு, காளை, எருமைகளை குளிக்க வைத்து, அவற்றை அலங்கரித்தனர். மாடுகளுக்கு சந்தனம், குங்குமம், திருநீறு ஆகியவற்றை அண்ணாமலை பூசினார். பின், தொழுவத்திலேயே பொங்கல் வழிபாடு நடத்தினார். பின் பசு, காளை, எருமைகளுக்கு பொங்கல், பழம் கொடுத்து வழிபாடு நடந்தது.

