ADDED : மார் 17, 2025 04:17 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த தோகைமலையில், அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின், 100வது ஆண்டுவிழா, மாவட்ட கல்வி அலுவலர் சுகானந்தம் தலைமையில் நடந்தது.
தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கருப்பண்ணன், பொருளாளர் ரெங்கநாதன், முன்னாள் பஞ்., மன்ற தலைவர் தனமாலினி ஆகியோர் முன்-னிலை வகித்தனர். பள்ளி உதவி ஆசிரியர் பாலசுப்பிரமணியன், அனைவரையும் வரவேற்றார். தலைமை ஆசிரியர் ஜெயமணி, ஆண்டு அறிக்கை வாசித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ராமர் கலந்துகொண்டார்.
தொடர்ந்து, பள்ளியில் நடத்தப்பட்ட தேர்வுகளில் முதல், 2, 3ம் இடம் பிடித்த மாணவ, மாணவியர், 100 சதவீதம் பள்ளிக்கு வருகை புரிந்த மாணவ, மாணவியர், கலைத்திருவிழா போட்-டியில் கலந்துகொண்ட மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.
மேலும், அனைத்து ஆசிரியர்களையும் பாராட்டி பரிசு
வழங்கினர்.