ADDED : ஆக 04, 2026 03:53 AM

அரவக்குறிச்சி; அரவக்குறிச்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்-ளியில் மாணவர்களுக்கு போதை எதிர்ப்பு விழிப்-புணர்வு ஓவிய போட்டியை, வட்டார வள மைய மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வி தொடங்கி வைத்தார்.
மேலும் பேச்சு, கவிதை, பாடல் போட்டி நடைபெற்றது. வழிபாட்டு கூட்டத்தில் மாணவர்கள் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு உறு-திமொழி எடுத்தனர்.பின்னர் மாணவர்களை கொண்ட போதை எதிர்ப்பு விழிப்புணர்வு குழு அமைக்கப்பட்டது. பள்ளி துாதுவர் ஷிப்ல் ஹூசைன், குறும்படத்தின் மூலம் போதையால் ஏற்படும் ஆபத்து பற்றி எடுத்துக் கூறினார். மேலும் மாணவர்கள், மத்திய அரசின் விக்சித் பாரத் இணையதளத்திற்கு சென்று பெற்றோருடன் இணைந்து உறுதிமொழி எடுத்து, அதிலிருந்து சான்றிதழ்களை பெற்று பள்ளி வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்து, விழிப்பு-ணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை மகிழ்முற்ற செயலர் ஷகிலா பானு, ராபியாபஸ்ரி, காயத்ரி, ரொக்கையாபீவி, கவிதா, கிருஷ்ணவேணி, புவ-னேஸ்வரி, ஜோதிமணி, தஸ்லீம் ஆகியோரை தலைமையாசிரியர் சாகுல் அமீது மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் பாராட்டினர்.
