ADDED : ஆக 12, 2026 07:29 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர்
டவுன் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் என் நண்பன் அறக்கட்டளை சார்பில், போதை
பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, பழைய பஸ் ஸ்டாண்ட்
மனோகரா கார்னரில் நடந்தது.
அதில், மது போதையில் இளைஞர்கள்
சாலையில் தகராறு செய்வது போலவும், அவர்களை எமதர்மன், சித்ரகுப்தன்
வேடமிட்ட வர்கள் உயிர் எடுத்து, சொர்க்க ரத வாகனத்தில் ஏற்றி செல்வது
போலவும், 10க்கும் மேற்பட்டவர்கள் நடித்து காட்டினர். நிகழ்ச்சியில்,
கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும்
என் நண்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
