/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அங்கன்வாடி மையம் கோரி அடுக்குமாடி குடியிருப்போர் மனு
/
அங்கன்வாடி மையம் கோரி அடுக்குமாடி குடியிருப்போர் மனு
அங்கன்வாடி மையம் கோரி அடுக்குமாடி குடியிருப்போர் மனு
அங்கன்வாடி மையம் கோரி அடுக்குமாடி குடியிருப்போர் மனு
ADDED : அக் 14, 2025 01:46 AM
கரூர், பி.வெள்ளாளபட்டி அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில், அங்கன்வாடி மையம் ஏற்படுத்த வேண்டும் என, குடியிருப்பு மக்கள், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:
புலியூர் அருகே பி.வெள்ளாளபட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறோம். இந்த குடியிருப்பில் கர்ப்பிணிகள், சிறுவர், சிறுமியர் பலர் உள்ளனர். இவர்கள் ஆரம்ப கல்வி, சுகாதார சேவைகள் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். இங்கு, அங்கன்வாடி மையம் இல்லாததால் குழந்தைகளை படிக்க வைக்க, பள்ளிகளை தேடி செல்ல வேண்டி உள்ளது. இங்கிருந்து, அங்கன்வாடி மையம், பள்ளிகள் தொலைவில் உள்ளது. எனவே இந்த பகுதியில், அங்கன்வாடி மையத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.