/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையில் கால்நடைகள் பிடிக்க மக்கள் வேண்டுகோள்
/
சாலையில் கால்நடைகள் பிடிக்க மக்கள் வேண்டுகோள்
ADDED : நவ 15, 2024 02:10 AM
சாலையில் கால்நடைகள்
பிடிக்க மக்கள் வேண்டுகோள்
அரவக்குறிச்சி, நவ. 15-
கால்நடைகளை, சாலைகளில் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
கரூரிலிருந்து, சின்னதாராபுரம் செல்லும் சாலையில் அதிக வாகனங்கள் செல்கின்றன. சின்ன தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில், கால்நடை வளர்க்கும் சிலர், சாலைகளில் அவிழ்த்து விடுகின்றன. இதனால் சாலையில் சுற்றித்திரியும், கால்நடைகளால் விபத்துகள் ஏற்படுகிறது. சாலையில் செல்லும் மாடுகளை பார்த்ததும், சிலர் மிரண்டு ஓடுகின்றனர். அதேபோல் மாடுகள், ஆடுகள் சில நேரங்களில் வாகனங்களின் முன்புறம் வந்து விடுகின்றன. இதனாலும் விபத்துகள் ஏற்பட்டு
விடுகிறது.
எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கால்நடைகளை கட்டுப்படுத்த, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.