/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
29 வழித்தடங்களில் மினி பஸ் இயக்க விண்ணப்பிக்கலாம்
/
29 வழித்தடங்களில் மினி பஸ் இயக்க விண்ணப்பிக்கலாம்
ADDED : பிப் 14, 2025 07:16 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில், 29 வழித்தடங்களில் மினி பஸ் இயக்க விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக, மினி பஸ் இயக்க விரிவான திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, கரூர் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்டு, 29 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில், புலியூர் முதல் வளையக்காரன்புதுார், டி.வெங்கடாபுரம் பிரிவு முதல் வி.எஸ்.பி கல்லுாரி, தண்ணீர் பந்தல் புதுார் முதல் புன்னம்சத்திரம், நொய்யல் குறுக்கு சாலை முதல் பி.காளிபாளையம், வள்ளிபுரம் முதல் வேப்பம்பாளையம்.
புகழூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் புன்னம் சத்திரம், மண்மங்கலம் முதல் வள்ளியப்பம்பாளையம், குந்தானி பாளையம் முதல் திருக்காடுதுறை பிரிவு, கரூர் சர்ச் கார்னர் முதல் துவரப்பாளையம், கரூர் பழைய அரசு மருத்துவமனை முதல் மண்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, தடாக்கோவில் பைபாஸ் முதல் ஈசநத்தம், கரடிப்பட்டி முதல் அருங்கரையம்மன் கல்லுாரி, ஈசநத்தம் முதல் வேலன்செட்டி, பள்ளப்பட்டி முதல் குரும்பப்பட்டி வைரமடை முதல் வெள்ளக்கோயில் அரசு மேல்நிலைப்பள்ளி, பரமத்தி முதல் எல்லமேடு பிரிவு, பாளையம் பிரிவு முதல் ஈசநத்தம், கணக்கப்பிள்ளை புதுார் பிரிவு முதல் வெள்ளக்கோயில் அரசுப் பள்ளி, அய்யர்மலை முதல் சேங்கல் சந்தை, சிந்தாமணிப்பட்டி முதல் சேங்கல் சந்தை, அய்யர்மலை முதல் லாலாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் உள்பட, 29 வழித்தடங்களில் விண்ணப்பிக்க விரும்புவோர், வழித்தட விபரங்களை குறிப்பிட்டு கரூர் வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் பிப்., 24க்குள் விண்ணப்பிக்கலாம்.

