/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முதல்வர் விளையாட்டு விருது ஆக., 11க்குள் விண்ணப்பிக்கலாம்
/
முதல்வர் விளையாட்டு விருது ஆக., 11க்குள் விண்ணப்பிக்கலாம்
முதல்வர் விளையாட்டு விருது ஆக., 11க்குள் விண்ணப்பிக்கலாம்
முதல்வர் விளையாட்டு விருது ஆக., 11க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 17, 2025 02:10 AM
கரூர்,கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு சார்பில், தேசிய அளவில் பதக்கம் பெற்ற  வீரர்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துனர், நிர்வாகம், ஆதரவளிக்கும் நிறுவனம், நன்கொடையாளர், ஆட்ட நடுவர் ஆகியோர்களுக்கு முதல்வர் விளையாட்டு விருது வழங்கப்படுகிறது.
இதற்கு,  இரண்டு முறை, தமிழக அணியிலும், இந்திய அணியிலும் விளையாடி இருக்க வேண்டும். இந்திய அணியில் பங்கேற்றவர்கள், தமிழகத்தில் பணி நிமித்தம் குறைந்தது, ஐந்தாண்டுகளாக வசித்து வரும் முப்படை, ரயில்வே, அஞ்சல் உள்பட பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை அலுவலகத்திற்கு வரும், ஆக., 11க்குள் அனுப்ப வேண்டும். விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை, 7401703493 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.