ADDED : மே 29, 2026 05:51 AM
அ நிறம் | அளவு
குளித்தலை, குளித்தலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலக இளநிலை உதவியாளராக நளினி என்பவர், 27 ஆண்டுகள் பணியில் இருந்து நிறைவு பெற்றார். இவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
உதவி கூட்ட பொறியாளர் கணபதி தலைமை வகித்தார். உதவி பொறியாளர் ஜெயபாலன், கண்காணிப்பாளர் கலா முன்னிலை வகித்தனர். துறை சார்பில் பணி நிறைவு பெற்ற நளினிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை இளநிலை உதவியாளர் சந்திரசேகரன், அரசு ஒப்பந்ததாரர் பழனிச்சாமி, ஆய்வாளர்கள் சேகர், பாலகிருஷ்ணன் மற்றும் சாலை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர்.
