/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கண்டுணர்வு சுற்றுலா சென்ற அரவக்குறிச்சி விவசாயிகள்
/
கண்டுணர்வு சுற்றுலா சென்ற அரவக்குறிச்சி விவசாயிகள்
கண்டுணர்வு சுற்றுலா சென்ற அரவக்குறிச்சி விவசாயிகள்
கண்டுணர்வு சுற்றுலா சென்ற அரவக்குறிச்சி விவசாயிகள்
ADDED : ஜூன் 12, 2025 01:20 AM
அரவக்குறிச்சி, ஈரோடு மாவட்டத்தில் நடந்த வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை பார்வையிட, அரவக்குறிச்சியில் இருந்து, 50 விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை, உழவர் நலத்துறை சார்பில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் விஜயமங்கலம் பகுதியில், நேற்று துவங்கியது.
இதை பார்ப்பதற்காக, அரவக்குறிச்சி வட்டாரத்தில் இருந்து, 50 விவசாயிகள் சென்றிருந்தனர். வேளாண்மையில் நவீன தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள், உயர்விளைச்சல் தரவல்ல புதிய பயிர் இரகங்கள், வேளாண்மையில் மின்னணு தொழில்நுட்பங்கள், சந்தைப்படுத்தும் நுட்பங்கள், உணவு பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி தொடர்பான விழிப்புணர்வு போன்ற வேளாண் சார்ந்த விவரங்களை விவசாயிகள் பார்த்தனர்.
ஏற்பாடுகளை, அரவக்குறிச்சி வட்டார தொழில்நுட்ப மேலாளர் சோனியா, உதவி தொழில் நுட்ப மேலாளர் பிரபாகரன் மதன் ஆகியோர் செய்தனர்.