/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி பள்ளி மாணவர்கள் மாவட்ட போட்டிக்கு தேர்வு
/
அரவக்குறிச்சி பள்ளி மாணவர்கள் மாவட்ட போட்டிக்கு தேர்வு
அரவக்குறிச்சி பள்ளி மாணவர்கள் மாவட்ட போட்டிக்கு தேர்வு
அரவக்குறிச்சி பள்ளி மாணவர்கள் மாவட்ட போட்டிக்கு தேர்வு
ADDED : டிச 26, 2024 01:44 AM
அரவக்குறிச்சி, டிச. 26-
கன்னியாகுமரியில் உள்ள, 133 அடி உயர திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டு, வெள்ளி விழா முடிவதை ஒட்டி நடத்தப்பட்ட போட்டிகளில், அரவக்குறிச்சி மாணவர்கள் வெற்றி பெற்று மாவட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரியில், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதன் வெள்ளி விழாவை முன்னிட்டு, தமிழக அரசால் மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்பு வித்தல், வினாடி-வினா, பேச்சு போட்டி ஆகியவை வட்டார அளவில் நடைபெற்றது. இதில் பேச்சு போட்டியில், அரவக்
குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சஞ்சீவிகுமார் முதலிடம், நுாருல் பௌஜானா இரண்டாம் இடம், மகிமா மூன்றாம் இடம் பெற்று மாவட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டிச., 27ம் தேதி கரூர் மாவட்ட மைய நுாலகத்தில் நடைபெறும், மாவட்ட போட்டியில் இவர்கள் பங்கு பெறுவர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த பட்டதாரி ஆசிரியர் ஷகிலா பானுவையும், வட்டாரக்கல்வி அலுவலர்கள் பாண்டித்துரை, சதீஷ்குமார், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) தமிழ்ச்செல்வி, தலைமை ஆசிரியர் சாகுல் அமீது ஆகியோர் பாராட்டினர்.

