/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கண்டுணர்வு சுற்றுலா சென்ற அரவக்குறிச்சி விவசாயிகள்
/
கண்டுணர்வு சுற்றுலா சென்ற அரவக்குறிச்சி விவசாயிகள்
கண்டுணர்வு சுற்றுலா சென்ற அரவக்குறிச்சி விவசாயிகள்
கண்டுணர்வு சுற்றுலா சென்ற அரவக்குறிச்சி விவசாயிகள்
ADDED : அக் 01, 2024 06:57 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை துறையின், 'அட்மா' திட்டத்தில், சேலம் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்திற்கு, 50 விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா சென்றனர்.
அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை துறையின் கீழ், சேலத்தில் உள்ள மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், ஏத்தாப்பூர் மற்றும் வேளாண் அறிவியல் நிலையம், சந்தியூர் ஆகிய இடங்களுக்கு விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா சென்றனர். அங்கு, தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டன.
சுற்றுலாவில், விவசாயிகளுக்கு ஏத்தாப்பூர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் ஆமணக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து, பேராசிரியர்கள் ரஞ்சித்குமார், முல்லைமாறன் ஆகியோர் விளக்கமளித்தனர். பூச்சியியல் பேராசிரியர் பிரபாவதி, பூச்சி தாக்குதலில் இருந்து எவ்வாறு பயிர்களை பாதுகாப்பது, பூச்சிகளை இன கவர்ச்சி பொறி, சோலார் விளக்கு பொறி, மஞ்சள் வண்ண அட்டை பயன்படுத்தி பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை குறித்து விளக்கமளித்தார். டாக்டர் பிரபாகரன், சிறுதானிய மதிப்பூட்டும் இயந்திரங்களை எவ்வாறு பயன்படுத்துவது என விளக்கமளித்தார். மேலும், காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல், அசோலா வளர்ப்பு, மாடித்தோட்டம் குறித்து, செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.