ADDED : ஆக 22, 2025 01:57 AM
கரூர், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியம் கவுண்டம்பாளையம் தொடக்கப் பள்ளியில், பள்ளி அளவிலான கலை திருவிழா போட்டி நடந்தது.வட்டார கல்வி அலுவலர் சதீஷ்குமார் தொடங்கி வைத்தார். மழலையர் பாடல், கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், மாறுவேட போட்டி, களிமண் பொம்மை செய்தல், பேச்சுப்
போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, தேச பக்தி பாடல் உள்பட, 18 வகையான போட்டிகள் நடந்தன. நடுவர்களாக ஓவிய ஆசிரியர் ரவிக்குமார், கல்லுாரி விரிவுரையாளர் நித்யா ஆகியோர் செயல்பட்டனர். பள்ளி அளவில் போட்டியில் முதலிடம் பெறும் மாணவர்கள், குறுவள அளவு போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுகின்றனர். விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் பரணிதரன் செய்திருந்தார்.
நிகழ்ச்சியில், பள்ளி மேலாண்மை குழு தலைவர் இளமதி, துணைத் தலைவர் பூங்கோதை, புலியூர் டவுன் பஞ்., கவுன்சிலர்கள் தங்கமணி, கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.