/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பசுபதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
/
பசுபதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
ADDED : ஜன 04, 2026 07:44 AM
கரூர்: ஆருத்ரா தரிசனத்தையொட்டி, கல்யாண பசுப-தீஸ்வரர் கோவிலில், நேற்று நடராஜ மூர்த்திக்கு மஹா அபிேஷகம் நடந்தது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா கடந்த டிச., 26ல் நடராஜர் ரக் ஷா பந்தனம் மற்றும் மாணிக்க வாசகர் திரு-வெம்பாவை, உற்சவத்துடன் கோவிலில் துவங்-கியது. அதை தொடர்ந்து, மாணிக்க வாசகருக்கு அபி ேஷகம், நடராஜ மூர்த்திக்கு திருவெம்-பாவை பாடுதலும் நடந்தது.
நேற்று முன்தினம் காலை, திருக்கல்யாண உற்-சவம், பிச்சாண்டார் திருவீதி உலா, அம்மன் தீர்த்-தவாரிக்கு அமராவதி ஆற்றுக்கு போய் வருதல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 5:00 மணிக்கு நடராஜ மூர்த்திக்கு மஹா அபிேஷகம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. 10:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் ஊர்வலமும், மதியம் கோவில் முன், சித்சபா பிரவேசம் என்ற,
மட்டை-யடி திருவிழாவும் நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் சிவபுரீஸ்-வரர் கோவிலில், நேற்று காலை நடராஜர், சிவ-காமி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள், சந்தனம், பன்னீர் மற்றும் திருநீறு அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்து தீபாரா-தனை காட்டப்பட்டது. சிவாயம், குளித்தலை, பணிக்கம்பட்டி, வலையப்பட்டி, அய்யர்மாலை, கோடங்கிப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்-டனர். பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது.

