/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிவபுரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா
/
சிவபுரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா
ADDED : ஜன 15, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், :
கரூர் அருகே, சிவாயம் பிரகல் நாயகி உடனுறை சிவபுரீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது.
கரூர் மாவட்டம், சிவாயத்தில் உள்ள பிரசித்தி பெற்ற, பிரகல் நாயகி உடனுறை சிவபுரீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, சிறப்பு பூஜை நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் மாலை, கோவிலில் உற்சவர் நடராஜ மூர்த்திக்கு, 18 வாசனை திரவியங்கள் மற்றும் வண்ண மலர்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. பிறகு, சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் நடராஜ மூர்த்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு இரவு, அன்னதானம் வழங்கப்பட்டது.