/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மேகபாலீஸ்வரர் கோவிலில் வளர்பிறை அஷ்டமி பூஜை
/
மேகபாலீஸ்வரர் கோவிலில் வளர்பிறை அஷ்டமி பூஜை
ADDED : ஜூலை 15, 2024 01:01 AM
கரூர்: ஆனி மாத வளர்பிறை அஷ்டமியையொட்டி, நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவிலில், நேற்று மாலை சிறப்பு பூஜை நடந்-தது.
அதில், மூலவர் கால பைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம், குங்குமம் உள்ளிட்ட, 18 வகை-யான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.பின், காலபைரவர் பூக்கள் மற்றும் வடை மாலை அலங்கா-ரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல், புன்னம் புன்னைவன நாதர் உடனுறை, புன்னைவன நாயகி கோவில், திருக்காடுதுறை மாதேஸ்வரன் கோவில், நத்தமேடு ஈஸ்-வரன் கோவில்களிலும், ஆனி மாத வளர்பிறை அஷ்டமியை-யொட்டி, கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.