/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்துக்கு நாளை சட்டசபை உறுதிமொழி குழு வருகை
/
கரூர் மாவட்டத்துக்கு நாளை சட்டசபை உறுதிமொழி குழு வருகை
கரூர் மாவட்டத்துக்கு நாளை சட்டசபை உறுதிமொழி குழு வருகை
கரூர் மாவட்டத்துக்கு நாளை சட்டசபை உறுதிமொழி குழு வருகை
ADDED : அக் 22, 2024 01:17 AM
கரூர் மாவட்டத்துக்கு நாளை
சட்டசபை உறுதிமொழி குழு வருகை
கரூர், அக். 22-
சட்டசபை உறுதிமொழி குழு நாளை கரூருக்கு வருகிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ய, தமிழ்நாடு சட்டசபை உறுதிமொழி குழு நாளை (23ம் தேதி) வருகிறது. இதில், சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மீது, தொடர்புடைய துறைகளின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்கின்றனர். மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் நடந்து வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்தும் பார்வையிட உள்ளனர்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.