/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோடை உழவு பணிகளை செய்ய உதவி இயக்குனர் அறிவுறுத்தல்
/
கோடை உழவு பணிகளை செய்ய உதவி இயக்குனர் அறிவுறுத்தல்
கோடை உழவு பணிகளை செய்ய உதவி இயக்குனர் அறிவுறுத்தல்
கோடை உழவு பணிகளை செய்ய உதவி இயக்குனர் அறிவுறுத்தல்
ADDED : மே 13, 2024 07:28 AM
கரூர் : விவசாயிகள் கோடை உழவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
கோடை உழவு செய்வதால், மண்ணில் காற்றோட்டம் மேம்படுகிறது. மேலும், மண்ணில் உள்ள தீங்கு விளைவிக்கும் பூச்சிகள், முட்டைகள், கூட்டு புழுக்கள் மேல்பகுதிக்கு கொண்டு வரப்படுவதால், கோடை வெப்பத்தின் காரணமாக அழிக்கப்படுகிறது.
கோடை உழவு செய்யும் போது, கடினமான மண் அடுக்கு உடைந்து, மழைநீரை உறிஞ்சும் திறன் அதிகரிக்கும். இதனால், வளி மண்டல நைட்ரேட் நீரில் கரைந்து, மண்ணுக்குள் சென்று மண்வளத்தை மேம்படுத்துகிறது. எனவே, விவசாயிகள் கோடை உழவு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.