/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உழவர் நல சேவை மையம் தொடங்க தோட்டக்கலை உதவி இயக்குனர் அழைப்பு
/
உழவர் நல சேவை மையம் தொடங்க தோட்டக்கலை உதவி இயக்குனர் அழைப்பு
உழவர் நல சேவை மையம் தொடங்க தோட்டக்கலை உதவி இயக்குனர் அழைப்பு
உழவர் நல சேவை மையம் தொடங்க தோட்டக்கலை உதவி இயக்குனர் அழைப்பு
ADDED : டிச 22, 2025 08:59 AM
குளித்தலை: குளித்தலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள செய்திக்-குறிப்பு:
கரூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை மூலம், முதல்வரின் உழவர் நல சேவை மைய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், இளநிலை விவசாயம், தோட்டக்கலை, வேளாண் அல்லது பட்டய படிப்பு முடித்தவர்கள் மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம். இம்மையங்களின் உழவர்களுக்கு தேவையான விதைகள், உரங்கள், உள்ளிட்ட இடுபொருள்கள் விற்பனை செய்யப்ப-டுவதோடு, வேளாண் உற்பத்தியை பெருக்கவும், பயிர்களில் ஏற்படும் பூச்சி நோய், வேளாண்-மைக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்-படும். அத்துடன் நவீன தொழில் நுட்பங்கள், வேளாண் விலை பொருட்களை மதிப்பு கூட்டுதல் குறித்து ஆலோசனை வழங்கப்படும்.
இத்திட்டத்தில், 10 லட்சம் ரூபாய் முதல், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான மையம் அமைக்க, 30 சதவீதம் மானியமாக அதாவது, மூன்று லட்சம் ரூபாய் முதல், 6 லட்சம் ரூபாய் வரை வழங்கப்ப-டுகிறது. இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள், வேளாண்மை அல்லது தோட்டக்கலை அல்லது வேளாண்மை பொறியியல் அல்லது வேளாண்மை வணிகம் பட்ட படிப்பு அல்லது பட்-டய படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வங்கி நடைமுறைகளை பின்பற்றி கடன் ஒப்-புதல் பெறப்பட்ட பின், இத்திட்டத்தில் மானிய உதவி பெற, இணையதளத்தில் உரிய ஆவணங்-களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

