ADDED : ஏப் 24, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகத்துக்கு, சொந்தமான பழைய ஜீப் ஏலம் விடப்படுகிறது.இது குறித்து, கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை:கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள, உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகத்தில் கழிவு செய்யப்பட்ட மகேந்திரா ஜீப்பை, மே, 14 காலை 9:30 மணிக்கு பொது ஏலத்தில் விடப்படுகிறது.
மே 2 காலை 10:00 மணி முதல் ஏலம் நடக்கும் நாள் வரை, பார்வைக்காக ஜீப் வைக்கப்படும். ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள், 8 முதல் 13 வரை காலை, 11:00 முதல் பகல் 1:00 மணி வரை நுழைவு கட்டணமாக, 50 ரூபாய், வைப்பு தொகையாக, 5,000 ரூபாய் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலம் எடுத்தவர்கள் ஏல தொகையை, உடனே செலுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

