ADDED : ஜூலை 14, 2026 05:47 AM
கரூர்; கரூர் அருகே, வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 'மகிழ் முற்றம்' குழு சார்பில், வானியல் கற்றல் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் தர்மலிங்கம் தலைமை வகித்தார்.
வானத்தை பார்த்து வியப்பது மட்டுமல்ல, அதை அறிவியலோடு வாசிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கம் வேண்டும். அதன்படி, இரவு வானில் காணப்படும் நட்சத்திரங்கள், கோள்கள், விண்மீன் கூட்டங்கள், நிலவின் நிலைகள், சூரிய குடும்பம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள், எளிய விளக்கங்களுடனும் செயல்-வழிக்கற்றலுடனும் அறிமுகப்படுத்தப்பட்டன.தொலைநோக்கி மூலம் நிலவின் மேற்பரப்பு, சனிக்கோளின் வளையங்கள், வியாழனின் துணைக்கோள்கள் போன்ற விண்வெளி அதிச-யங்களை மாணவர்கள் நேரடியாக கண்டு மகிழ்ந்-தனர். இதுவரை பாடப்புத்தகங்களில் மட்டுமே பார்த்திருந்த தகவல்களை நேரில் அனு பவித்த மாணவர்கள், பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
விண்மீன் வரைபடங்களை பயன்படுத்தி திசை-களை அறிதல், நட்சத்திர கூட்டங்களை அடை-யாளம் காணுதல், விண்வெளி குறித்த வினாடி---வினா, அறிவியல் விளையாட்டுகள் மற்றும் குழு விவாதங்கள் ஆகியவை மாணவர்களின் சிந்-தனை திறனையும் ஆய்வு திறனையும் மேம்ப-டுத்தின.
நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் வாசுகி, மனோகர், மகேஸ்வரி வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்-றனர்.
