ADDED : ஜூன் 30, 2026 05:11 AM
கரூர்; பள்ளி மாணவ, மாணவியருக்கான தடகள போட்டி ஜூலை, 4ல் நடக்கிறது என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தடகள போட்டி ஜூலை, 4ல் நடக்கிறது. இதில், 17 வயதிற்குட்பட்ட அனைத்து பள்ளி மாணவ, மாணவியருக்கு, 100 மீ, 200 மீ, 400 மீ மற்றும் 800 மீட்டர் போட்டி நடக்கிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவியர் தங்கள் பெயர் விபரங்களை, https://forms.gle/sC6zPMfVNcCMdFLF8 என்ற கூகுள் பார்மிலோ அல்லது தான்தோன்றி-மலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவ-லகத்தில் நேரிலோ அல்லது மாவட்ட விளை-யாட்டு அலுவலக இ.மெயில் dsokarur@gmail.com அல்லது 04324-299826 அல்லது 7401703493 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்-யலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
