/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அ.தி.மு.க., பிரமுகர் மீது தாக்குதல்: 5 பேர் கைது
/
அ.தி.மு.க., பிரமுகர் மீது தாக்குதல்: 5 பேர் கைது
ADDED : ஆக 21, 2024 02:23 AM
கரூர்:கரூர் அருகே, அ.தி.மு.க., பிரமுகரை தாக்கிய வழக்கில், ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் அருகே, நிலம் அபகரிப்பு தொடர்பான புகாரில் முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் விஜயபாஸ்கர், அ.தி.மு.க., பிரமுகர் பிரவீன் ஆகியோரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கடந்த மாதம், 17 ல் கைது செய்தனர். தற்போது, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பிரவீன் ஆகியோர் நிபந்தனை ஜாமினில், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, கரூர் தீரன் நகரில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் அலுவலகத்தில் நாள்தோறும், இரண்டு முறை கையெழுத்து போட்டு வருகின்றனர்.இந்நிலையில் கடந்த, 16 ல் கரூர்-கோவை சாலை, ரெட்டிப்பாளையம் பகுதியில் சென்ற பிரவீனை, காரில் வந்த அடையாளம் தெரியாத சிலர் தாக்கினர்.
பிரவீன் கொடுத்த புகாரின்படி, கரூர் டவுன் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாரை சேர்ந்த மோகன சுந்தரம், 49; சிவா, 30; வெங்டேஷ்குமார், 20; கரூர் புகழூரை சேர்ந்த சசிக்குமார், 38; கலையரசன், 28; ஆகிய, ஐந்து பேர், பிரவீனை தாக்கியதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, ஐந்து பேரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.