/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஸ்கேன் சென்டரில் டாக்டர் மீது தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு
/
ஸ்கேன் சென்டரில் டாக்டர் மீது தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு
ஸ்கேன் சென்டரில் டாக்டர் மீது தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு
ஸ்கேன் சென்டரில் டாக்டர் மீது தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 19, 2025 01:13 AM
கரூர், கரூரில் ஸ்கேன் சென்டரில், டாக்டரை தாக்கியதாக, இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் வையாபுரி நகரை சேர்ந்தவர் கவின்ராஜ், 40, டாக்டர். இவர், அதே பகுதியில் கடந்த, 14 ஆண்டுகளாக ஸ்கேன் சென்டர் நடத்தி வருகிறார். கடந்த, 16ம் தேதி மாலை ஸ்கேன் சென்டரில், டாக்டர் கவின்ராஜ், நோயாளிகளுக்கு ஸ்கேன் எடுக்கும் பணியில் இருந்தார்.
அப்போது, கரூரை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு ஸ்கேன் எடுக்க உடன் சென்ற, அடையாளம் தெரியாத பெண் ஒருவர், ஸ்கேன் சென்டரில் நுழைந்துள்ளார். பிறகு, முதலில் தன்னுடன் வந்த ரமேசுக்கு, ஸ்கேன் எடுக்குமாறு டாக்டருடன் தகராறு செய்து, அவரை அந்த பெண் அடித்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து, டாக்டர் கவின்ராஜ் அளித்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் ஸ்கேன் எடுக்க வந்த ரமேஷ், அவருடன் சென்ற அடையாளம் தெரியாத பெண் ஆகிய, இரண்டு பேர் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.