sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

யானை தந்தம் கடத்தி விற்பனை செய்ய முயற்சி; 5 பேர் கைது

/

யானை தந்தம் கடத்தி விற்பனை செய்ய முயற்சி; 5 பேர் கைது

யானை தந்தம் கடத்தி விற்பனை செய்ய முயற்சி; 5 பேர் கைது

யானை தந்தம் கடத்தி விற்பனை செய்ய முயற்சி; 5 பேர் கைது


ADDED : ஜன 04, 2025 01:18 AM

Google News

ADDED : ஜன 04, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, ஜன. 4-

குளித்தலையில், யானை தந்தம் கடத்தி விற்க முயற்சி செய்த சிறுவன் உட்பட ஐந்து பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், வி.என்.எஸ். நகரை சேர்ந்தவர் பெருமாள், 42. இவருக்கு கிடைத்த யானை தந்தத்தை விற்க முயற்சி செய்தார்.

சென்னை வனத்துறைக்கு கிடைத்த தகவல்படி மதுரை, திருச்சி வனச்சரகர்கள், புரோக்கர் உதவியுடன் யானை தந்தத்தை வாங்குவதற்காக ஏற்பாடு செய்து, குளித்தலை பகுதிக்கு வரவழைத்தனர்.

பெருமாள் தன்னிடமிருந்த யானை தந்தத்தை, விற்பனை செய்வதற்கு நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நாராயணன் நகரை சேர்ந்த நாகராஜ், 56, திருச்சி மாவட்டம், தொட்டியம் கோசவம்பட்டியை சேர்ந்த ராஜா, 65, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் முனையனுார் மேல தெருவை சேர்ந்த நடராஜன், 56, திருச்சி மாவட்டம் தொட்டியம், பாலசமுத்திரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த, 17 வயது சிறுவன் ஆகியோருடன் நேற்று முன்தினம் மாலை குளித்தலை வந்தனர்.

இவர்களை, மதுரை, திருச்சி வனச்சரகர் நவீன் மற்றும் குழுவினர், வனச்சரக அலுவலர் தண்டபாணி தலைமையில், வனக்காப்பாளர்கள் சிவரஞ்சனி, ஈஸ்வரி, வனவர் பெரியசாமி கொண்ட குழுவினர் பின் தொடர்ந்தனர்.

குளித்தலை-மணப்பாறை நெடுஞ்சாலை கோட்டைமேடு அருகே கடத்தி வந்த யானை தந்தத்தை, பையில் வைத்து விற்பதற்காக காத்திருந்தவர்களை சுற்றி வளைத்தனர். ஐந்து பேரையும் பிடித்தனர். அவர்களிடம் வனச்சரகர்கள் நடத்திய விசாரணையில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்த பெருமாள் என்பவர், தான் வைத்திருந்த யானை தந்தத்தை விற்பனை செய்வதற்கு நான்கு நபர்கள் உடந்தையாக இருந்தது

தெரியவந்தது.

இவர்களிடமிருந்து ஐந்து மொபைல்போன், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள யானை தந்தத்தை பறிமுதல் செய்தனர்.

இவர்கள் மீது, வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து, நேற்று மாலை குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

இதில் நான்கு பேர் கரூர் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவனை கரூர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.






      Dinamalar
      Follow us