/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வே.பாளையம் அருகே விவசாய தோட்டத்தில் திருட முயற்சி
/
வே.பாளையம் அருகே விவசாய தோட்டத்தில் திருட முயற்சி
ADDED : ஏப் 30, 2025 01:13 AM
கரூர்:
வேலாயுதம்பாளையம் அருகே, விவசாய தோட்டங்களில் புகுந்து, பொருட்களை திருட முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர், ராமகிருஷ்ணாபுரம் வடக்கு பகுதியை சேர்ந்தவர் முகேஷ், 34; இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம், வேலாயுதம்பாளையம் அருகே ஆவாரங்காட்டு புதுார் பகுதியில் உள்ளது. கடந்த, 28ல், மர்ம நபர்கள் விவசாய தோட்டத்தில் புகுந்து, பொருட்களை திருட முயன்றனர். அதேபோல், அருகில் உள்ள ஜெயக்குமார் என்பவரின் விவசாய தோட்டத்திலும், மர்ம நபர்கள் திருட முயன்றுள்ளனர். இரண்டு விவசாய தோட்டங்களிலும், குறிப்பிடத்தக்க பொருட்கள் எதுவும் இல்லாததால், மர்ம நபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். இதுகுறித்து, முகேஷ் போலீசில் புகார் செய்தார்.
வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

