/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அவுரி விதை தட்டுப்பாடு விவசாயிகள் பாதிப்பு
/
அவுரி விதை தட்டுப்பாடு விவசாயிகள் பாதிப்பு
ADDED : ஜூலை 20, 2025 05:28 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட மாயனுாரில் வேளாண்மைத்துறை அலுவலகம் செயல்படுகிறது.
இந்த அலுவ-லகத்தில் விவசாயிகளுக்கு தேவையான இடு பொருட்கள் விற்-பனை செய்யப்படுகிறது. இதில் உளுந்து, துவரை, எள், நெல், சூரியகாந்தி, கடலை, இடு பொருட்களுக்கு தேவையான நுண்-ணுாட்ட சத்துகள் மற்றும் நெல் சாகுபடிக்கு தேவையான அவுரி விதைகள் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், அவுரி விதை விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வேளாண்-மைத்துறை அலுவலகத்திற்கு வரத்தான அவுரி விதைகள் விற்று தீர்ந்தன. கூடுதலாக விவசாயிகளுக்கு தேவைப்படும் நிலை ஏற்-பட்டுள்ளது. இதனால், வெளி மார்க்கெட்டில், ஒருகிலோ அவுரி விதை, 135 ரூபாய் என, அதிக விலை கொடுத்து வாங்குகின்-றனர். இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.