ADDED : நவ 30, 2025 02:14 AM
அ நிறம் | அளவு
அரவக்குறிச்சி, நவ. 30
அரவக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், கரூர் மற்றும் அரவக்குறிச்சி சி.ஐ.டி.யு., ஆட்டோ, டாக்சி, டெம்போ மற்றும் வேன் ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ரங்கராஜ் தலைமை வகித்தார். ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பைக் டாக்சி முறையை ரத்து செய்ய வேண்டும். ஆட்டோ மீட்டர் கட்டணத்தை, தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும். கட்டுமான வாரியம் போல, ஓட்டுனர்களுக்கு வீடு கட்டுவதற்காக, ரூ. 4 லட்சம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
