/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிக் பாக்ஸிங் போட்டியில் பதக்கம் பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
/
கிக் பாக்ஸிங் போட்டியில் பதக்கம் பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
கிக் பாக்ஸிங் போட்டியில் பதக்கம் பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
கிக் பாக்ஸிங் போட்டியில் பதக்கம் பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
ADDED : மே 13, 2024 07:29 AM
கரூர், : கிக் பாக்ஸிங் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு, கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், பாராட்டு விழா நடந்தது. கரூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் உமா சங்கர் தலைமைவகித்தார்.
சென்னையில், தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலைக்கழக அரங்கில் கடந்த 3, 4, 5 ஆகிய நாட்களில் தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்ஸிங் அசோசியேசன் சார்பில் மாநில அளவிலான போட்டிகள் நடந்தன. இதில், கரூர் மாவட்ட அணி வீரர்கள், 5 தங்கப் பதக்கம், 5 வெள்ளி பதக்கம், 6 வெண்கலப்பக்கம் உட்பட மொத்தம், 16- பதக்கங்களை வென்றனர்.
முதல் இடம் பிடித்த ஐந்து மாணவர்கள் இம்மாத இறுதியில் புனே-வில் நடக்கும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். இவர்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
விழாவில், கரூர் அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்க செயலாளர் ரவிக்குமார், துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.