/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிந்தவர்களுக்கு விருது
/
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிந்தவர்களுக்கு விருது
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிந்தவர்களுக்கு விருது
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிந்தவர்களுக்கு விருது
ADDED : அக் 17, 2025 01:33 AM
கரூர் :மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக, சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்கள் வரும், 26க்குள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு முதல்வர் விருது வழங்கப்படுகிறது.- 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், சான்றிதழ் என, 22 விருதுகள் வழங்கப்படுகிறது. https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தில் விபரங்களை பதிவு செய்தும், கோரப்பட்ட விபரங்களை இணைத்தும் வரும், 26க்குள் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் விண்ணப்பிக்காத விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது. மேலும், விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை, 26 மாலை, 5:00 மணிக்குள் கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.