ADDED : ஏப் 09, 2026 04:13 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து வார்டுகளில் உள்ள, 80 வயது கடந்த முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தங்களுடைய வீட்டிலேயே இருந்து ஓட்டளிப்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் தனி தொகுதியில் நடைபெற உள்ள தேர்தலில், 80 வயது கடந்த முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலே இருந்தபடி, ஓட்டளிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்காக ஒவ்வொரு வீட்டிலேயே, மற்றும் கடைகள், பொது இடங்களில் மக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம், 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இப்பணிகளில் கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் வெங்கடேசன், டவுன் பஞ்சாயத்து அலுவலர்கள், பணியாளர்கள்
ஈடுபட்டனர்.
