ADDED : ஜன 24, 2026 05:38 AM
அ நிறம் | அளவு
குளித்தலை; குளித்தலை வாரச்சந்தை அருகே நேற்று, தமிழ்-நாடு அரசு எச்.ஐ.வி., கட்டுப்பாட்டு வாரியம் சார்-பாக, பொதுமக்கள் மத்தியில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு நடைபெற்றது.
குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவ-மனையின், நம்பிக்கை மைய ஆலோசகர் சுஜாதா முன்னிலை வகித்தார். தோகைமலை சின்னப்பொண்ணு கலைக்குழுவினர் சார்பில் கலை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், எச்.ஐ.வி., எய்ட்ஸ் பால்வினை தொற்றுநோய், ஏ.ஆர்.டி., மற்றும் பொது சுகாதாரம், கொரோனா மற்றும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு, மக்கும் குப்பை, மக்காத குப்பை பற்றிய விழிப்புணர்வை கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் பாடல்கள் மூலமாக மக்கள் பயன்படும் வகையில் நடைபெற்றது. நகராட்சி பணியா-ளர்கள், சமுக ஆர்வலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
