திடக்கழிவு மேலாண்மை திட்டம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
திடக்கழிவு மேலாண்மை திட்டம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : ஆக 02, 2026 07:12 AM

அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
அடுத்த குப்புரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
மற்றும் ஆதிநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், திடக்கழிவு
மேலாண்மை திட்டத்தின் கீழ், குப்பையை பிரித்து வழங்குவது குறித்து,
விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்கு டவுன் பஞ்., செயல்
அலுவலர் அண்ணாமலை தலைமை வகித்தார்.
மேல குப்பிரெட்டிப்பட்டி தலைமை
ஆசிரியர் அன்பரசி மற்றும் பலர் பங்கேற்றனர். சுகாதார ஆய்வாளர்
பாக்கியம், திட்டம் குறித்து பேசினார். தொடர்ந்து மக்கும் குப்பை, மக்கா
குப்பைகளை தனித்தனியாக பிரித்து மக்களிடம் வாங்குதல் குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், கவுன்சிலர்கள் மற்றும் டவுன் பஞ்., துாய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
