/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகழூர் அரசு பள்ளியில் விழிப்புணர்வு முகாம்
/
புகழூர் அரசு பள்ளியில் விழிப்புணர்வு முகாம்
ADDED : ஜூலை 14, 2025 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துறை சார்பில், புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. அதில், பள்ளியில் மாணவர்கள் ஒழுக்கமாக நடந்துகொள்ளும் முறைகள், பட்டியலின மாணவர்க-ளுக்கு அரசு வழங்கி வரும் சலுகைகள், மாணவர்களின் உயர்-கல்வி, கல்வி கடன் பெறும் முறைகள் குறித்து, போலீஸ் எஸ்.ஐ., சதாசிவம் விளக்கமளித்து பேசினார்.
முகாமில், தலைமையாசிரியர் விஜயன், காவல் துறை புள்-ளியியல் ஆய்வாளர் பிரேம்குமார், பள்ளி உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் குப்புசாமி, என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சரவணன், உதவி தலைமையாசிரியர் யுவராஜா மற்றும் மாணவர்கள் பங்கேற்-றனர்.