ADDED : மார் 23, 2026 02:47 AM

அ நிறம் | அளவு
கரூர்: கரூர் போக்குவரத்து போலீசார் சார்பில், ஷேர் ஆட்டோ டிரைவர்-களுக்கு விழிப்புணர்வு முகாம், மனோகரா கார்னரில் நடந்தது. அதில், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
மது அருந்திவிட்டு ஷேர் ஆட்டோ ஓட்டக்கூடாது. சீருடை அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிவாணன் வழங்கி பேசினார். தொடர்ந்து, ஷேர் ஆட்டோ டிரைவர்கள், போக்குவ-ரத்து விதிமுறைகளை பின்பற்றுவோம் என, உறுதிமொழி எடுத்-துக்கொண்டனர். முகாமில், போக்குவரத்து போலீசார் மற்றும் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் பங்கேற்றனர்.
