ADDED : நவ 26, 2026 01:14 AM
அ நிறம் | அளவு
கரூர்: கரூர் அரசு வேளாண்மை கல்லுாரி சார்பில், ஜெகதாபி கிராமத்தில், முருங்கை நடவு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
அதில், முருங்கை நடவுக்காக குழி அமைத்தல், நடவு இடைவெளி, முருங்கை நடவு முறைகள், முருங்கை சாகுபடி முக்கியத்துவம், பராமரிப்பு முறை, பொருளாதார நன்மை குறித்து, அரசு வேளாண்மை கல்லுாரி மாணவியர் விளக்கம் அளித்தனர். பிறகு, ஒரு ஏக்கர் நிலத்தில் முருங்கை நாற்று நடவு செய்யப்பட்டது.
முகாமில், ஜெகதாபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.
