/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு

ADDED : டிச 07, 2024 06:45 AM
அரவக்குறிச்சி: பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில், தீயணைப்பு துறை சார்பில், தீ தடுப்பு குறித்த செயல் விளக்கம் செய்து காட்டப்பட்-டது.
தீயணைப்புத்துறை சார்பில் பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவ-மனை, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீ பற்றி கொண்டால், அதை அணைப்பது குறித்து செயல்முறை விளக்கத்-துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அரவக்குறிச்சி, தீயணைப்பு துறை சார்பில் பள்ளப்பட்டி அரசு மருத்துவம-னையில், தீ விபத்தின் போது தீ தடுப்பு மற்றும்
பாதுகாப்பாக இருப்பது குறித்து செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு தீயணைப்பு துறை வீரர்கள் செயல் விளக்கம்
அளிக்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
மருத்துவமனையில் தீ பற்றி கொண்டால், தண்ணீர் ஊற்றி அணைக்காமல் ஈரத்துணியை வைத்து மட்டுமே அணைக்க
வேண்டும். இல்லையென்றால், தீ தடுப்பு சாதனங்களை கொண்டு பாதுகாப்பான முறையில் தீயை அணைக்க வேண்டும்
என அறிவு-றுத்தப்பட்டது. மீட்பு பணிக்காக எந்நேரத்திலும் தீயணைப்பு துறையினரை அழைக்கலாம் என கூறப்பட்டது.
அரவக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் ராதா
கிருஷ்ணன் மற்றும் வீரர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.